ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது.!
அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கட்டுவனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஆவார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

