காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!
மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மெதகமை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் வெடித்துள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

