உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்டைதீவு வடக்கின் இரவுகள் நிகழ்வுக்கு அனுமதி இல்லை.!

இலங்கை செய்திகள் 53 நிமிடங்கள் முன்
67 பார்வைகள்

மண்டைதீவு எக்கோரூறிச வளாகத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வடக்கின் இரவுகள் நிகழ்ச்சியை நடத்த வேலணை பிரதேச சபை அனுமதி வழங்காது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளருக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் உத்தரவிட்டிள்ளார்.

சில தினங்களாக யூட்ரியூப் சமூக ஊடகம் ஒன்றில் மண்டைதீவு சுற்றுலாத்தளப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வடக்கின் இரவு நிகழ்வு நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து இன்று சபை அமர்வில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சபையின் ஆளுகைக்குள் இருக்கும் இந்த சுற்றுலாத்தளம் EOI என்னும் ஆர்வத்தின் வெளிப்பாடு உடன்படிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

ஆனால் அங்கு குறித்த நிகழ்வுகள் நடத்த எந்தவொரு அனுமதியோ ஒப்பந்தமோ சபை குறித்த தரப்பினருடன் மேற்கொள்ளவில்லை.

எனவே, குறித்த ஏற்பாட்டு குழுவினரின் இந்த நிகழ்வுக்கு எந்தவித அனுமதியையும் வேலணை பிரதேச சபை வழங்கவில்லை. குறித்த தரப்பினரும் எந்தவொரு அனுமதியையும் கோரவில்லை.

எனவே, சபையின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த சுற்றுலாத் தளத்தில் நிகழ்வுகளை நடத்த சபை அனுமதி வழங்காது என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்தார்.

இதே நேரம் குறித்த ஒப்பந்ததாரர்கள் சபையுடனான ஒப்பந்தத்தை மீறியமை, கலாச்சார சீரழிவுகளுக்கு உந்துதலளித்து வருகின்றமை, சபையின் பெரும் தொகை நிதியை சீரழித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னகர்த்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான அனுமதியற்ற நிகழ்வுகளை குறித்த தரப்பினர் நடத்த முயற்சிப்பது வேலணையில் பெரும் அதிருப்பியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

69 0 0
இலங்கை செய்திகள்

இனந்தெரியாத நபர்களால் மூன்று ஏக்கர் நெற்செய்கை அழிப்பு.!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

தமிழ், முஸ்லிம், மலையகப் பிரதிநிதிகளுடன் சஜித் தீவிர கலந்தாய்வு.!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணி அறிக்கை சந்தேகத்துக்குரியது.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்று ஜனநாயகத்…

65 0 0