உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குவைத்தில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 53 நிமிடங்கள் முன்
77 பார்வைகள்

குவைத் நாட்டில் இருவேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் அலி சபா அல்-சலம், அல்-நஸ்தா ஆகிய இரு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தே இந்த இரண்டு பெண்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்களின் மரணங்கள் இயற்கை கடந்து நேர்ந்திருக்கலாம் என அந்நாட்டுப் பொலிஸார் வெளிப்படுத்தும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உயிரிழந்த பெண்களில் ஒருவர், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் அஹ்மதி பொது குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் பெண் 1988இல் பிறந்தவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மற்றொரு பெண், அல்-நஹ்தா எனுமிடத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் 1999ஆம் ஆண்டு பிறந்த பெண் என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சடலம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஜஹ்ரா பொது குற்றவியல் பிரிவினர், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து சான்றுகளை சேகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு பெண்களின் மரணங்களும் சந்தேகத்துக்கிடமான முறையில் இடம்பெற்றிருப்பதால் இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

75 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனதை அவர்களால் வெல்லவே முடியாது.!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலிலும்…

68 0 0
இலங்கை செய்திகள்

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.!

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…

63 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது.!

அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…

83 0 0