உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
64 பார்வைகள்

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது எந்தவொரு நிலையிலும் பலவீனமான ஓர் அரசு அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல.

ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையைக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போலிப் பிரசாரங்களைக் கண்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள்.

எனவே, எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, நாட்டின் அபிவிருத்திக்குச் சாதகமான முறையில் பொறுப்புடன் தொழிற்பட வேண்டும். அத்தகைய பிரச்சாரங்களால் அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

78 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனதை அவர்களால் வெல்லவே முடியாது.!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலிலும்…

69 0 0
இலங்கை செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உ**யிரிழப்பு.!

குவைத் நாட்டில் இருவேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத்…

77 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது.!

அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…

84 0 0