உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்; நாடு கடத்த நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேசப் பொலிஸாரின் வழிகாட்டல்கள் மற்றும் இரகசியத் தன்மையைப் பேணும் நோக்கத்தின் காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்கள் தங்கியுள்ள நாடுகளின் விவரங்களையோ பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

1977 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்கக் கைதிகள் பரிமாற்றச் சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இந்தக் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றக் குழுக்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பான தரவுகளையும் அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

2020ஆம் ஆண்டில் 2 படுகொலைகள், 2021ஆம் ஆண்டில் 4 படுகொலைகள், 2022ஆம் ஆண்டில் 23 படுகொலைகள், 2023ஆம் ஆண்டில் 16 படுகொலைகள், 2024ஆம் ஆண்டில் 42 படுகொலைகள், 2025ஆம் ஆண்டில் 29 படுகொலைகள், 2026ஆம் ஆண்டில் 18 படுகொலைகள்

அதன்படி, கடந்த சில வருடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களினால் மொத்தம் 136 மனிதப் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

76 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனதை அவர்களால் வெல்லவே முடியாது.!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலிலும்…

69 0 0
இலங்கை செய்திகள்

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.!

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…

63 0 0
இலங்கை செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உ**யிரிழப்பு.!

குவைத் நாட்டில் இருவேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத்…

77 0 0