கொ**லைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது.!
தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் தணமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி கங்கேயாய பகுதியில் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பில் தணமல்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (22) கங்கேயாய பகுதியில் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 57 வயதுடையவர்களாவர்.
இச் சம்பவம் தொடர்பில் தணமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

