உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பழமையான பனை ஓலைச்சுவடிகளை பாதுகாக்க கங்காராம விகாரையுடன் கைகோர்த்தது இந்தியா.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
72 பார்வைகள்

கொழும்பு கங்காராம விகாரையானது, புது டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையம் (IIC) மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ‘SAMHITA’ திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க பனை ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்கும் முக்கிய பணியை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான சிறப்பு முன்னேற்ற ஆய்வு, ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் தளப் பயணம் ஆகியவை இன்றைய தினம் (அக்டோபர் 23, 2026) கங்காராம விகாரையில் நடந்தது.

இதன் மூலம் அழைக்கப்பட்ட பிரமுகர்கள், நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் நடந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை நேரில் பார்வையிடவும் வாய்ப்பு ஏற்பட்டது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 வரலாற்றுச் சிறப்புமிக்க பனை ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதும் பட்டியலிடுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் 2026 இல் தொடங்கப்பட்ட இப்பணிகள், ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து வரவிருக்கும் நவம்பர் 2026 இன் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்தர டிஜிட்டல் படப்பிடிப்பு, முறையான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் எளிதில் சேதமடையக்கூடிய நிலையில் உள்ள இந்த மூல ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுவதுடன், அவற்றின் அசல் பிரதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரால் தொடங்கப்பட்டு, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியில் முக்கிய பங்காற்றிய மறைந்த கலபொட ஞானிஸ்ஸர தேரர் (பொடி ஹாமதுரு) உள்ளிட்ட பல தேரர்களின் வழிகாட்டலில் வளர்ந்த கங்காராம விகாரையின் வரலாற்று மரபைத் தொடரும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

தற்போது விகாராதிபதி கலாநிதி கிரின்ஜே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் இந்த வரலாற்றுச் சேகரிப்புகள் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ஆன்மீக, வரலாற்று மற்றும் கலாச்சார உறவை இத்திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது.

பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்புக்கு கங்காராம விகாரை தனது சிறப்பான ஆசீர்வாதங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மேலும், இந்தியா இன்டர்நேஷனல் மையத்தின் தலைவர் ஸ்ரீ ஷியாம் சரண், பணிப்பாளர் ஸ்ரீ கே.என். ஸ்ரீவஸ்தாவ், செயலாளர் ஸ்ரீ கன்வால் வாலி, திட்டப் பணிப்பாளர் டாக்டர் சுதா கோபாலகிருஷ்ணன், திட்ட முகாமையாளர் நிஹாரிகா குப்தா, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் தூதரக அதிகாரிகளின் பங்களிப்பையும் கங்காராம விகாரை பாராட்டியுள்ளது.

இம்முயற்சியானது வெறும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரப் புரிதலையும் நட்புறவையும் ஆழப்படுத்துவதுடன், எதிர்கால கல்வி ஆராய்ச்சிக்கும் பௌத்த ஆய்வுகளுக்கும் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்க உட்பட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும்…

83 0 0
இலங்கை செய்திகள்

எமது மக்கள் படும் அவலத்தின் பாவங்களை அநுர அரசு சுமக்க வேண்டும்.!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது. தமது சொந்த…

68 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது.!

தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் தணமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்…

92 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு.!

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய…

97 0 0