சாமர சம்பத் தசநாயக்க உட்பட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!
இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட செயலாளரும் ஒரு வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்தறிந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

