உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 59 நிமிடங்கள் முன்
88 பார்வைகள்

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதிய கிராம மக்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், நேற்று (22) விசுவமடு அட்டைக்குள சிறுவர் பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்காவில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவி திருமதி. இந்திராணி நித்தியானந்தனின் நிதிப் பங்களிப்புடன், மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் குறைத்து, பாடசாலைக்குச் செல்வதற்கும் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் உதவும் வகையில் இந்த மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன், புதிய கிராம மக்கள் மகளிர் அணியின் புதுக்குடியிருப்பு பிரதேச இணைப்பாளர் திருமதி தீபன் அனஸ்ரியா, தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள், மகளிர் அணியினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடும் யானை; தொடரும் மருத்துவ சிகிச்சைகள்.!

வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம்…

81 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும், உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே.!

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.…

80 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை…

90 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில்…

73 0 0