உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண் சரிவு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
28 பார்வைகள்

இன்று மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா கெந்தகொளை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ ஹட்டன் சாமிமலை ஹட்டன் மஸ்கெலியா ஹட்டன் நோர்வூட் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிக்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோளுக்கு இணங்க சரிந்த மண் திட்டுகள் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மினுவன் தெனிய ஹிட்டியகம பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது என பொல்பிட்டிய பொலிசார் தெரிவித்தனர்

மண் திட்டுகள் அகற்ற பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை…

5 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

24 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

7 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச்…

23 0 0