உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
24 பார்வைகள்

பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19) அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத் தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மகா ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த நால்வரின் சட@லங்களும் மீட்பு!

கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில்,…

18 0 0
இலங்கை செய்திகள்

மகா ஓயாவில் நீராடச் சென்ற 3 யுவதிகள் உட்பட நால்வர் மாயம்!

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மகாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இன்று பிற்பகல் 2.00…

16 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவுத் தபால் விநியோகத்தில் தாமதம் : பல்கலைக்கழக மாணவி பாதிப்பு!

டிக்கோயா புளியாவத்தை, இன்ஜெஸ்றி பகுதியில் பதிவு தபால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.…

21 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கள்ளியாடி கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

கள்ளியாடி கிராம உத்தியோகத்தர் பிரிவு (MN/06) இல் இன்று 19.09.2026 கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்…

7 0 0