மகா ஓயாவில் நீராடச் சென்ற 3 யுவதிகள் உட்பட நால்வர் மாயம்!
திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மகாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.00 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரைப் காப்பாற்ற முயன்றபோதே ஏனைய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மூன்று யுவதிகளையும் இளைஞரையும் தேடும் பணியில் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட, பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.