உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

பேருந்தில் தவறவிட்ட பெறுமதிமிக்க பொருட்களை மீட்டு ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கான கௌரவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
32 பார்வைகள்

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று புதன்கிழமை முல்லைத்தீவிற்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்தது ஒப்படைத்த குறித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கௌரவிக்கப் பட்டுள்ளனர்.

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (16) காலை 5.30 மணியளவில் முல்லைத்தீவிற்கு குறித்த தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுள்ளது.

இதன் போது குறித்த பேருந்தின் சாரதியாக முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துனராக டெனிஸ் ஆகியோர் கடமையாற்றியுள்ளளனர்.இதன் போது குறித்த பேருந்தில் தர்மபுரம் பகுதியில் வைத்து பெண் ஒருவர் ஏறியுள்ளார்.இந்த நிலையில் குறித்த பெண் குறித்த பணப்பை யை தவற விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் பணப்பையை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அதை மீட்டு சோதனை செய்த போது குறித்த பணப்பையில் தேசிய அடையாள அட்டை,தங்க செயின் மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவை காணப்பட்டுள்ளது.

விரைந்து செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த பணப்பையை உடனடியாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தில் அதன் தலைவர் ரி.ரமேஷ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் உடனடியாக குறித்த பணப்பையின் உரிமையாளராக குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறித்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரின் முன் மாதிரியான செயலை பாராட்டும் வகையில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் மற்றும் மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் ஆகியோர் இணைந்து ளெரவித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நான் புலிதான் ஆனால் விடு@த@லைப் புலி அல்ல: அர்ச்சுனா விளக்கம்!!

மேடையில்  தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி  தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.…

18 0 0
இலங்கை செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேராவுக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவை, 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

43 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கு நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கான நான்கு மாடிக் குடியிருப்புக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. டமாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு…

43 0 0
இலங்கை செய்திகள்

கெசல்கமு ஓயாவை இடைமறித்து சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழப்பட்ட பகுதி முற்றுகை!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் கெசல்கமு ஓயா நோர்வூட், ஒர்ட்ரி தோட்டத்தில் உள்ள ஓயாவை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு…

46 0 0