உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை வீணடித்த நெதன்யாகு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
30 பார்வைகள்

இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் சுமார் 4,70,000 டொலர்கள் (சுமார் 4.49 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமை அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இந்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த ஒப்பனைச் செலவில் சுமார் 90 சதவீதத்தை தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோரே பயன்படுத்தியுள்ளனர்.

2022-ஆம் ஆண்டில் பென்னட் மற்றும் லாபிட் பிரதமர்களாக இருந்தபோது ஒப்பனைச் செலவு சுமார் 84,000 ஷேகல்களாக (ரூ. 26.34 லட்சம்) இருந்த நிலையில், 2023-இல் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அது 3,11,000 ஷேகல்களாக (ரூ. 97.52 லட்சம்) அதிகரித்தது.

2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்த மாதத்தில் மட்டும் நெதன்யாகுவின் தலைமுடி அலங்காரத்திற்காக சுமார் 77,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரியில் நெதன்யாகு வோஷிங்டனுக்கு மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் போது ஒப்பனைக்காக மட்டும் சுமார் 13,500 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

ஆடைகள் மற்றும் உபசரிப்பு தொடர்பான பிரதிநிதித்துவச் செலவுகளாக நெதன்யாகு 134,000 டொலர்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், பென்னட் 19,000 டொலர்களையும், லாபிட் 2,600 டொலர்களையும் மட்டுமே செலவிட்டுள்ளனர்.

அரசுப் பணம் என்பது தனிப்பட்ட நிதி அல்ல என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

இருப்பினும், “தேசிய பாதுகாப்பு” காரணங்களைக் கூறி ஒப்பனைக் கலைஞர்களின் பெயர்களை அரசு இன்னும் மறைத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஸாம்ஃபியாவில் இணையைத் தேடி 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள்!

இணையை தேடி ஸாம்ஃபியாவில் (Zambia) நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று…

30 0 0
உலக செய்திகள்

சவுதி வான் படைத் தளத்தின் மீது ஹவூதி போராளிகள் தாக்குதல்!

தென் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேட்டர் ஹனீஷ் மற்றும் லெஸர் ஹனீஷ் (Greater and Lesser hanish) ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்…

33 0 0
உலக செய்திகள்

இதயத்தில் சிக்கிய ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின்…

30 0 0
உலக செய்திகள்

தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சீனா!

சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று…

12 0 0