உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொ*ல்லப்பட்டமைக்கு ஐ.நா. கடும் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
35 பார்வைகள்

கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தக் கொடூர செயலுக்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – அன்ட்ரூ பிரெஞ்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,

“தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கின்றது. எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக வேண்டும். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்தத் தாக்குதலில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமையுடன் அவர்களின் தந்தையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலாளிகள் வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்துத் தவறுதலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்.!

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட…

38 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

34 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

26 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

27 0 0