உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

ஊழல்வாதிகளுக்கு எதிரான கைது வேட்டை; இது ஆரம்பம் மட்டுமே.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
33 பார்வைகள்

“எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில்தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடையத் தேவையில்லை. இது ஆரம்பம்தான். இனி கைதுகள் தொடரும். ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் திணறுகின்றார்கள். கூட்டங்களை நடத்துகின்றார்கள். ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் வரையறையுள்ளது என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காகவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணைக்கு அமைவாகவே நான் செயற்படுகின்றேன். ஊழல் குற்றத்துக்காக மகன் சிறை சென்றுள்ளார் என்று அழுது புலம்புவது பயனில்லை. அரச நிதியைக் கொள்ளையடிக்கக் கூடாது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும்.

ஊழல்வாதிகளைக் கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றார்கள். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவும் நானும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்தக் ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தார்கள். சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.

அப்போதைய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள். இதுதான் அரசியல் பழிவாங்கல்.

எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில்தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடையத் தேவையில்லை. இது ஆரம்பம்தான். இனி கைதுகள் தொடரும்.

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஊழல்வாதிகள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இராஜதந்திர மட்டத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்.!

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட…

38 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

35 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

27 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

28 0 0