உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
134 பார்வைகள்

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப் புனரமைப்பு செய்ததிலும் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த கொடுக்கல் வாங்கல் இடைத்தரகு நிறுவனம் ஒன்றினூடாக மேற்கொள்ளப்பட்டு நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிக் போர் விமானக் கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் முறைகேடான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று முற்பகல் 9.10 மணியளவில் அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புத் துறைப் பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படைத் தளபதிகளிடம் தொடர்ந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, குறித்த மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

98 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0