உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
84 பார்வைகள்

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலை அமைந்துள்ள டன்சினன் கீழ் பிரிவு கடந்த டித்வா புயலின் போது இடிபாடுகளுக்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில் பாடசாலையும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் காணப்பட்டது. பின்னர் மக்கள் மீண்டும் சொந்த வீடுகளுக்கு திரும்பிய நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை நிறைவடைந்தும் பாடசாலை திறக்காமைனால் பெற்றோர்களும் மாணவர்களும் பாடசாலையை திறக்க கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த பாடசாலையிலும் ஊரிலும் தற்போது எந்த பாதிப்பும் கிடையாது எனவே பல கல்வியியலாளர்களை உருவாக்கிய பாடசாலையை மீள திறக்க வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கை ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு; மயிலிட்டி மக்கள் பிரதேச செயலாளருக்கு மகஜர்.!

வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தெல்லிப்பழை பிரதேச…

92 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

111 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

88 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

150 0 0