உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

எட்டு ஆண்டுகளாக காணாமல் போன மகனைத் தேடும் தந்தை.!

இலங்கை செய்திகள் 39 நிமிடங்கள் முன்
71 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தை பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 2018 ஆம் ஆண்டு 3 ஆம் மாதத்திலிருந்து காணாமல் போயுள்ளார்.

இவர் கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் காணாமால் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியிருக்கிறது. பலர் அதில் பேசியிருக்கிறார்கள், ஆனால் காணாமால் போன நபர் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

காணாமல் போனமை தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவரான செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் யாராவது அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு குடும்பத்தினர் கோரியுள்ளனர். (0774323487)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து!

குருநாகல் – கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த…

107 0 0
இலங்கை செய்திகள்

அராலி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் வெளியானது.!

அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.…

100 0 0
இலங்கை செய்திகள்

பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு…

119 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள்; ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்.!

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும்…

112 0 0