உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வெடித்த போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
145 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் கடற்கரை வெளியேற வேண்டும் என்று கோரி நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது. அங்கு, மேற்குறித்த காணிகளை விடுவிக்குமாறு பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

139 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை…

121 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும்…

105 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப்…

132 0 0