உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

இந்திய செய்திகள் 7 மணி நேரம் முன்
161 பார்வைகள்

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கின் கீழ், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், துபாய் வழியாக லண்டன் செல்கிறார்.

எதிர்வரும் 16-ஆம் திகதி வரை அவர் லண்டனில் தங்கி தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசுவதுடன், அங்கு வசிக்கும் தமிழ் மக்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

பின்னர் 17-ஆம் திகதி காலை 8 மணிக்குத் துபாய் வழியாகச் சென்னை திரும்பவுள்ளார்.

அதிகாரிகள் அரசு முறை பயணங்களுக்குத் தனி வானூர்தியை பயன்படுத்துவது வழக்கமாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் இந்த முறை பயணிகள் வானூர்தியிலேயே லண்டனுக்கு பயணம் செய்கிறார்.

அவருடன் உயர் மட்ட அதிகாரிகள் குழு மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் லண்டன் செல்கின்றனர். இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவே லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் 13-ஆம் திகதியன்று சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

அதன்போது, 1.2 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் இந்த முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அத்துடன், லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் முதலமைச்சரை வரவேற்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

100 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

103 0 0
இந்திய செய்திகள்

“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது…

96 0 0
இந்திய செய்திகள்

குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு…

156 0 0