உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பொருளாதாரத்தைச் சீரழித்த வரலாற்றைக் கொண்டவர்கள் நாட்டைச் சீரமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
112 பார்வைகள்

1971 மற்றும் 1988/1989 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சீரழித்தவர்கள், இன்று பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“2026 மார்ச் மாதமளவில் நாட்டின் கடன் சுமை 3,198 பில்லியன் ரூபாவாகவும், அதில் வெளிநாட்டுக் கடன் மட்டும் 1.89 பில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடன் வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 24 மாதங்களில் 76 ஆண்டுகால வரலாற்றை விட வேகமான விகிதத்தில் பெருமளவு கடன்களைப் பெற்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.

கடந்த கால அரசுகள் கடன் பெற்று மகாவலி, நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி மற்றும் மின்சார உற்பத்தி போன்ற பெரிய அளவிலான அபிவிருத்திகளைச் செய்தன. ஆனால், தற்போதைய அரசு அத்தகைய எந்தவொரு புதிய வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

பெறப்படும் கடன்களாலும் அத்தியாவசியப் பொருட்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளாலும் திறைசேரி நிரப்பப்படுகின்றது. பால்மா, கோதுமை மா மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் மீது தாங்க முடியாத பொருளாதாரச் சுமை திணிக்கப்பட்டு, தனிநபர் கடன் வீதம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையை, ஊழல் நிறைந்ததாகச் சித்தரித்து பலவீனப்படுத்த அரசு முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தனியார் துறை மீது குறைகூறுவதற்கு முன், நுரைச்சோலை நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் மற்றும் 325 கொள்கலன்கள் வரியின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் போன்ற அரச துறை சார்ந்த ஊழல்களையே அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த 76 ஆண்டுகளாக நாட்டில் ‘கறுப்புப் பொருளாதாரம்’ மட்டுமே இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுவது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 1948இல் சுதந்திரம் அடைந்தது முதல் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆடைத் தொழில் ஆகியவற்றில் நாடு அடைந்த பிரமாண்ட வளர்ச்சியே இன்றுவரை நாடு செயற்படக் காரணம். 1971 மற்றும் 1988/89 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் பஸ்களையும் தீக்கிரையாக்கிப் பொருளாதாரத்தைச் சீரழித்த வரலாற்றைக் கொண்டவர்களே இன்று பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகப் பேசுகின்றனர்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது நீதிமன்றங்களின் வழக்குத் தாமதத்தைக் குறைப்பதற்கோ மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ கொண்டுவரப்படவில்லை. இது அரசின் இருப்பைப் பாதுகாக்கவும், நீதித்துறையின் அதிகாரத்தில் தலையிடவுமே கொண்டுவரப்படுகின்றது.

கீழ் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்க உயர்மட்ட நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் அதிகரிப்பது உள்நோக்கம் கொண்டது.

எனவே, பொய்ப் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, மாகாண சபைத் தேர்தலையோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பையோ நடத்தி மக்கள் தீர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

99 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0