உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
41 பார்வைகள்

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கும் 5ஆயிரம் டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வாக்களிக்கும் முறையைத் செல்வாக்கு செலுத்தும் வகையில் பணம் வழங்குவது அமெரிக்கச் சட்டப்படி சட்டவிரோதமானது என்றாலும் பல சட்ட நிபுணர்கள் இது ஒரு வரிக்குறைப்பு வாக்குறுதியைப் போன்றது என்பதால் சட்டப்பூர்வமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.

இருப்பினும் இது மிகவும் வெளிப்படையான மற்றும் வர்த்தக ரீதியான ஒப்பந்தம் போல் இருப்பதாக சில வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு சுமார் 1.3 டிரில்லியன் டொலர் செலவாகும்.

இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து ட்ரம்ப் எந்தத் தெளிவுபடுகளையும் வழங்கவில்லை.

இருப்பினும் சுங்கவரி வருவாய் மூலம் இது ஈடுகட்டப்படலாம் என்று துணை ஜனாதிபதி ஜே.டி. வன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் தற்போதைய சுங்கவரி வருவாய் இந்தத் தொகையை விட மிகக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில் காங்கிரஸ் அனுமதியின்றி இவ்வளவு பெரிய தொகையை நிறைவேற்றுவது கடினம் என்றும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான வழிமுறையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதால் வாக்காளர்களைக் கவரும் நோக்கிலேயே ட்ரம்ப் இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க…

97 0 0
உலக செய்திகள்

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி…

93 0 0
உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில்…

76 0 0
உலக செய்திகள்

ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கையெழுத்தான இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் எதன் மீதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான…

115 0 0