உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

வாரத்துக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அரசியல் நாடகத்தையே நடத்துகின்றது அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
110 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள் மத்தியில் தற்காலிகப் பரபரப்பை உருவாக்கும் மலிவான கண்காட்சியாக இதனை நடத்தி வருகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசு தனது அரசியல் தோல்விகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் மறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்துக் கைது செய்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையும் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் விடுவிக்கப்படுவார்.

தங்களது ஆதரவாளர்களுக்கு ஏதோ சாதனை செய்துவிட்டதாகக் காட்டுவதற்காகவே வாரம் ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து பின்னர் விடுவிக்கும் உத்தியை அரசு கையாள்கின்றது.

தேர்தல் காலத்தில் மக்களுக்குப் பல போலி வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தங்களின் கறைபடிந்த பிம்பத்தை மறைக்க மீண்டும் பழைய தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் தற்போது தெளிவடைந்துவிட்டதால் இதுபோன்ற போலி நாடகங்களை நம்பமாட்டார்கள்.

அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான செல்வாக்கு இருக்குமானால், நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல், தைரியமாகத் தேர்தலைச் சந்தித்து மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.

ராஜபக்ஷக்களின் ஊழல்களுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தவர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தது தங்களது தரப்புதான். தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் முறையாகத் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு மலிவான ஊடகக் காட்சியாக மாற்றுவது சட்டத்தையும் நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயாலாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

101 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0