உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
93 பார்வைகள்

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி முன்னேறி உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றும், செங்கடலின் தெற்குப் நுழைவாயிலுமான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை மீது ஹூதிகள் மேலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும், ஹனிஷ் (Hanish) தீவுகளை அவர்கள் அடைந்துள்ளதாகவும் ஏமன் அரசாங்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள இந்த நீர்வழிப் பாதையை ஹூதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அது அமெரிக்காவுடனான போரில் அவர்களின் ஆதரவாளரான ஈரானுக்குப் பெரும் சாதகமாக அமையும்.

மேலும், இரண்டாவது முக்கியப் போக்குவரத்துப் பாதை வழியிலான விநியோகத்தைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்யும்.

நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தனது குடியரசுக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதித்துள்ள ஒரு போரிலிருந்து ட்ரம்ப் வெளியேறுவதையும் இது கடினமாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி கப்பல்களைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல் நிறுவனங்களுக்கும் செங்கடல் வழியிலான கடல்சார் பயணம் பாதுகாப்பானது என்று ஏமனின் ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதநேய நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, உலகளாவிய எண்ணெய்யின் ஐந்திலொரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மோதல் முடக்கியதிலிருந்து செங்கடல் பாதையையே அது பெரிதும் நம்பியுள்ளது.

ஏமன் அரசாங்கப் படைகளும் அவர்களின் பங்காளர்களும் செங்கடல் கடலோரப் பகுதியில் தெற்கு நோக்கியுள்ள துபாப் (Dhubab) பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க…

97 0 0
உலக செய்திகள்

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து…

40 0 0
உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில்…

76 0 0
உலக செய்திகள்

ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கையெழுத்தான இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் எதன் மீதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான…

115 0 0