உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
138 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 1,104 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் 978.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளும், காணிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்ட 109 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களும் 14 மில்லியன் ரூபாய் பணமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச பொலிஸாரின் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்ட 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 95 பேர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

‘1818’ என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகப் பல குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்து வருகின்றன.

இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுவரை 7,071 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 9,105 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

99 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0