உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
77 பார்வைகள்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

மொஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புடினை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியிருப்பதாவது:

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க…

97 0 0
உலக செய்திகள்

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து…

42 0 0
உலக செய்திகள்

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி…

93 0 0
உலக செய்திகள்

ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கையெழுத்தான இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் எதன் மீதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான…

116 0 0