உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க பாய்ந்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
122 பார்வைகள்

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்  சார்    ஆட்சியர் கலை மன்னன் அவர்களிடம்   விடுப்பு    கேட்டு வந்த   வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் இன்று (10) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக  தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

 இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும்,  மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் கலைமண்ணனிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். 

ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. 

பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்த நிலையில்  இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால்  பேசி செருப்பால் அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள்…

120 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட பேச்சு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள…

131 0 0
இலங்கை செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் சிலோன் மீடியா போரம் உயர்மட்டக் கலந்துரையாடல்

“இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists’ Trust Fund) ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ…

114 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் : தெரிவுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிரணி

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான…

97 0 0