உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட பேச்சு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
225 பார்வைகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்து வரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது இங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும் தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அவ்வாறே, குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி மற்றும் பிள்ளைகளின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

மேலும், இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், டாக்டர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமாலெப்பை, செல்வம் அடைக்கலநாதன், டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் உ**யிரிழந்த நிலையில் ஒருவர் மீட்பு.!

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக…

122 0 0
இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

119 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

121 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

122 0 0