உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய கௌரவம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உயரிய அதிகாரப்பூர்வ கௌரவச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

நாட்டின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு திமோரின் டிலி நகரில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டபோது, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸிடமிருந்து இச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை மலேரியாவற்ற நாடாகவும், தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் ரணஜன்னி (Tetanus) அற்ற நாடாகவும் உருவெடுத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்நோய்கள் மீண்டும் நாட்டுக்குள் பரவாமல் கடந்த ஒரு தசாப்த காலமாகத் தொடர்ந்து வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதே இந்த உயரிய அங்கீகாரத்திற்குக் காரணமாகும்.

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையை மலேரியாவற்ற நாடாக உலக சுகாதார அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

மாலைத்தீவுக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை முற்றாக ஒழித்த இரண்டாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றிருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அந்நோய் மீண்டும் பரவாமல் தடுத்து நிறுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தையே மலேரியாவற்ற மண்டலமாக மாற்றுவதற்கு இலங்கை பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதேபோல், தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோயையும் இலங்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டங்களையும் நாடு முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

இலங்கையின் வலுவான ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு, தேசிய அளவிலான அர்ப்பணிப்பு, பயனுள்ள தடுப்பூசி திட்டங்கள் மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு அமைப்பே இச்சாதனைகளுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, இச்சாதனைகள் வெறும் சுகாதார மைல்கற்கள் மட்டுமல்லாது, இலங்கை மக்களின் உயிரைப் பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நடவடிக்கையாகும் எனவும் பாராட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

110 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

102 0 0