உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
94 பார்வைகள்

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில் குறிப்பிடுகின்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல, மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய வேண்டும்.

இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில் இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். ஆகவே, இந்தச் சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக ஏற்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

109 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

102 0 0