உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

பிரித்தானிய மன்னர் தொடர்பில் புனையப்பட்ட காணொளியை வெளியிட்ட ட்ரம்ப்!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
95 பார்வைகள்

பிரித்தானிய மன்னர் சார்லஸ், அமெரிக்காவுக்கான அரசுப் பயணத்தின்போது மயங்கி வீழ்ந்த ஒருவரைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போன்ற தவறான மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எனினும் இந்த காணொளி 2020 ஜூலை மாதம் கொரோனா காலத்தில் மன்னர் சார்லஸ் ,அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்தபோது, பிரிஸ்டலில் உள்ள பல்பொருள் அங்காடி மையத்திற்குச் சென்றபோது எடுக்கப்பட்டதாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பொதுமகன் மயங்கி வீழ்ந்தபோது, மருத்துவ உதவி கிடைக்கும் வரை மன்னர் அருகிலேயே நின்றார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மூன்று நிமிடக் காணொளியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் மரியாதைக் குறைவாக நடப்பது போன்ற பிற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதற்கு மாற்றாக, ட்ரம்ப் அமெரிக்க வீரர்களை கௌரவிப்பது, வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!

சமூக வலைத்தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களைப் பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலான புதிய சட்ட வரைவை அவுஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள்…

108 0 0
உலக செய்திகள்

Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடித் தடை!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

106 0 0
உலக செய்திகள்

சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு!

உலகின் மிக அதிக வேதனம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கான ஆண்டுச் வேதனத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு…

115 0 0
உலக செய்திகள்

10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி!

தூதரக நிலைமைக்கு முரணான “ஏற்றுக்கொள்ள முடியாத” நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது. ஹங்கேரியின் பாதுகாப்பு…

104 0 0