உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
101 பார்வைகள்

மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுமனரத்ன தேரர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் அ.தர்சினி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்துள்ளார்.

அரச அலுவலகம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அரச கடமையினை ஆற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0