உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் சமல் ராஜபக்ஷ.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
147 பார்வைகள்

ஸ்ரீலங்கன் எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, இன்று (08) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

குறித்த விமானக் கொள்வனவு இடம்பெற்ற காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் மற்றும் அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் அவர் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் பல மில்லியன் டொலர் ஊழல் மற்றும் இலஞ்சப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகப் பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ‘எயார்பஸ் ஊழல்’ விவகாரம் தொடர்பில் இலங்கையில் மீளத் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அக்காலப்பகுதியில் அமைச்சரவையில் பதவி வகித்த பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்றுவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அதன் ஒரு கட்டமாகவே சமல் ராஜபக்ஷவிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இந்த வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகள் நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0