உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
73 பார்வைகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
………………..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய,…

114 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுக்கின்றது அரசு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

67 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!

பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை…

72 0 0