உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
69 பார்வைகள்

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.09.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புளத்சிங்ஹலயவில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை இடைவெளிவிட்டு போட்டு ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்திற்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள் கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என்றும், அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையும் இதுவே வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இக்கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும் பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் என பெரிதும் எதிர்பார்த்த போதிலும், “திருடர்களைப் பிடிப்போம்” என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பெல்லாம் ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை என்றும், அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்ட பின்னரே கைதட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான கூட்டங்களுக்கு பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்கு குடிநீர் போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி பயப்படாது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள் அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்திக் காட்டவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுக்கின்றது அரசு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

61 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!

பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின்…

66 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

73 0 0
இலங்கை செய்திகள்

பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை; மீட்கப்பட்ட துப்பாக்கிகள்.!

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து…

39 0 0