உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
56 பார்வைகள்

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று (04) நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலையையும் 248 ரூபாயிலிருந்து 210 ரூபாய் வரை 38 ரூபாயினால் குறைக்க பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டிற்குரியதாக 27 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

37 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத்…

65 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

62 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கைதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைதுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல்…

55 0 0