உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆளுநர் களப்பயணம்; மக்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
78 பார்வைகள்

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநர் மற்றும் வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனும் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான்குளம், ஐயங்கன்குளம், தேறாங்கண்டல், பாரதிநகர், புகழேந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (22.10.2026) வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டு, மக்களின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நேரில் கேட்டறிந்தனர்.

வீதிகளும் பாடசாலைகளும்
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வரும் துணுக்காய் – தென்னியன்குளம் வீதியை ஆளுநர் பார்வையிட்டார். புனரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தில் சுற்றுவேலி அமைத்தல் மற்றும் மண்டபம் நிர்மாணித்தல் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தேறாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் சில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

யோகபுரம் மகா வித்தியாலயத்துக்குச் சென்ற ஆளுநரிடம், விடுதி வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பாடசாலைக்குச் செல்லும் வீதியை அகலப்படுத்துதல் உள்ளிட்ட தேவைகள் எடுத்துரைக்கப்பட்டன.

சுகாதார வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
ஐயங்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்வையிட்ட ஆளுநர், 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பல பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையையும் நேரில் அவதானித்தார். மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பழுதுபார்ப்புக்காக அனுப்பப்பட்ட மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டி விரைவில் மீளக் கிடைக்கும் எனப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து மல்லாவி ஆதார மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். மருத்துவ நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குருதி வங்கி, நோயாளர், வெளிநோயாளர் சேவைகள் மற்றும் சத்திரசிகிச்சை நிலையத்துக்கான கட்டட வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு
பாரதிநகர் கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான புதிய கட்டடம் அமைத்தல் மற்றும் நெல் உலர்த்தும் தளத்தைப் புனரமைத்தல் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அயல் கிராமத்தில் ‘பிரஜாசக்தி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நெல் உலர்த்தும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

புகழேந்திநகரில் மயானம் தொடர்பாக நிலவும் பிரச்சினையை ஆளுநர் நேரில் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.

களப்பயணத்தின்போது அமைச்சுக்களின் செயலாளர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம்…

80 0 0
இலங்கை செய்திகள்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம்…

85 0 0
இலங்கை செய்திகள்

நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம்ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

86 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த…

69 0 0