உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
87 பார்வைகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம்ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மஹிந்த ராஜபக்ஷ, தனது செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கடிதம் பின்னர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடிதத்தில், நாமல் ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் தன்னிடம் அனுமதி கோரிய சம்பவத்தை மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூர்ந்துள்ளார்.

அப்போது, அரசியலுக்கு வருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் சிறைவாசத்தையும் துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் அரசியலில் பிரவேசித்த சில காலங்களிலேயே அப்போதைய அரசாங்கத்தினால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, யார் எதைக் கூறினாலும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வைக்குமாறு தனது மகனுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் தற்போது நாமல் பிறந்த அதே நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தங்களைப் பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் அதிகாரம் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவுக்கு மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

பெற்றோர் செய்யும் செயல்களுக்காக அவர்களது பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமது ஆட்சியின்போது வேலைவாய்ப்புகளைப் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், நாட்டு மக்கள் நன்றியுணர்வுள்ளவர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுமாறு மஹிந்த ராஜபக்ஷ தனது மகனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை மீட்டுக் கொடுத்ததற்காகவே ராஜபக்ஷ குடும்பத்தினர் தற்போது குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இறுதியாக, ‘உங்களுக்குக் கடவுள் துணை!’ என்ற வார்த்தைகளுடன் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம்…

80 0 0
இலங்கை செய்திகள்

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆளுநர் களப்பயணம்; மக்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு…

78 0 0
இலங்கை செய்திகள்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம்…

85 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த…

70 0 0