உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
84 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் நாளாந்தம் தள்ளி இயக்கும் அவல நிலை தொடர்கின்றது.

கட்டைக்காட்டில் இருந்து தினமும் காலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தே இவ்வாறு பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து இயங்காத சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பேருந்தை தள்ளி இயக்குவதும், அது சாத்தியமாகாதபோது பருத்தித்துறை நோக்கி பயணிக்கும் மற்றுமொரு அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்குவதும் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில், இன்று (4) காலை வழமைபோன்று பேருந்தை தள்ளி இயக்க முயன்ற போதும் அது இயங்கவில்லை. பின்னர் மற்றுமொரு அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயற்சித்த போதும் பேருந்து இயங்கவில்லை.

இதனால் கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் குறித்த பேருந்து சேவை இன்று இடம்பெறாத நிலையில், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான அரச பேருந்து சேவையை வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பயணிகளுக்கு தொடர்ச்சியான சிரமத்தை ஏற்படுத்தாத வகையில், நல்ல நிலையில் உள்ள அரச பேருந்தொன்றை வடமராட்சி கிழக்கு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆளுநர் களப்பயணம்; மக்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு…

1 0 0
இலங்கை செய்திகள்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம்…

80 0 0
இலங்கை செய்திகள்

நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம்ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

80 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த…

68 0 0