உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
88 பார்வைகள்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார் என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும், திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசமைப்பு பாதுகாப்புகளை வலுப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.!

அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப் பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித்…

46 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று…

69 0 0
இலங்கை செய்திகள்

22 ஆம் திருத்த விசாரணைகள் குறித்து கொமன்வெல்த் சட்டத்தரணிகள் விசனம்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய (கொமன்வெல்த்)…

23 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

76 0 0