உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
44 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி 29 அமெரிக்கப்…

53 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், தனிமைச் சிறையில் தங்கள் தந்தை உயிரிழக்கும் அபாயம்…

46 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல். ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான “Economic D-Day”…

50 0 0
உலக செய்திகள்

சூடான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அழுத்தம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய…

83 0 0