உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

இலங்கை செய்திகள் 54 நிமிடங்கள் முன்
51 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“22ஆவது அரசமைப்புத் திருத்தம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

நாட்டின் நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் இலங்கை சட்ட ஆணைக்குழு என எந்தவொரு முக்கிய தரப்பினருடனும் அவர் இது குறித்து எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்துக் கலந்துரையாட ஏப்ரல் மாதத்திலேயே நேரம் கோரியிருந்த போதிலும், அமைச்சரவை ஒப்புதல் பெற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே அவர்களுக்கு சந்திப்பு வாய்ப்பளிக்கப்பட்டது. தான் கூறுவது தவறு என்றால், எந்தெந்த நாட்களில் எந்தெந்தத் தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்ற விவரங்களை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும்.

ஜனாதிபதி திறந்த மனதுடன் செயற்படாமல் தன்னிச்சையாக எடுத்துள்ள இத்தீர்மானத்தின் விளைவை இறுதியில் முழு நாடும் அனுபவிக்க நேரிடும்.

5 வருட காலத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி ஒரு மக்களின் பிரதிநிதியாக மட்டுமே ஜனாதிபதி செயற்பட முடியுமே தவிர, நாட்டின் உரிமையாளரைப் போல செயற்பட முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

2 0 0
இலங்கை செய்திகள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல் நிலை கவலைக்கிடம்!

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது. இரத்தத்தில் ஏற்பட்ட பக்ரீயா தொற்று (bacterial infection)…

44 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

55 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0