கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!
ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்துடன், பெரஹரா விழாவை முன்னிட்டு தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மத்தியிலும் சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ஷ சுரங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

