உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
58 பார்வைகள்

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெரோக்சைட் (Hydrogen Peroxide) இரசாயனத்தை பருகியதில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமி ஆவார்.

வவுனியாவிலிருந்து சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த நிலையில், சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த இரசாயன திரவத்தை பருகியுள்ளார்.

திரவத்தை பருகிய உடனேயே சிறுமியின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் வெளியேறியதாக அவரது தந்தை ஜே. விக்னேஸ்வரன் மரண விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.

சிறுமி இரசாயன திரவத்தை பருகியதை அறிந்ததும் உடனடியாக பன்விலதென்ன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை எனவும், உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுமி குறித்த திரவத்தை நீர் என நினைத்துக் குடித்தமையாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

51 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

49 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

31 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

65 0 0