உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
30 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன் முதல் கொட்டகலை தலவாக்கலை வட்டகொட கிரேட் வெஸ்டன் நானுஓயா வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையில் கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு இடத்தில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய மோசமான வானிலை காரணமாக கட்டுமானத்திற்குத் தேவையான கற்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை சீரடைந்து, சீரான வானிலை நிலவும் பட்சத்தில், கிரேக்லி தோட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் புனரமைப்புப் பணிகளை இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள இடர்களால் செப்பனிடும் பணி சற்று மந்தமாக இடம்பெற்று வருகின்றன.

தொடர்ந்து இப் பகுதியில் காலநிலை சீராகும் பட்சத்தில் வேகமாக பணிகள் இடம்பெற்று பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெறும் என தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

50 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

47 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

64 0 0