உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வாய்ப்பு

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
64 பார்வைகள்

அடுத்த மாதம் செப்டம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தனது பிரதிநிதிகள் குழுவுடன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உறுதியானால், 7 ஆண்டுகளுக்குப் பின்னர். அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையும்.

முன்னதாக, 2019-இல் 200 அதிகாரிகளுடன் வருகை தந்த ஷி ஜின்பிங், இந்த முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய பெரிய குழுவுடன் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 எல்லை மோதலுக்குப் பிறகு நிலவும் சீரற்ற உறவை சீர்செய்யவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான தகராறுகளைக் கட்டுப்படுத்தி ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்த உச்சிமாநாடு பயன்படும் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2024 ஒக்டோபரில் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, அண்மையில் ஜூலை மாத இறுதியில் எல்லையில் படைவீரர்கள் நேருக்கு நேர் சந்தித்த சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில், எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பீஜிங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதியின் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய…

48 0 0
உலக செய்திகள்

ஹைட்டியில் வன்முறை : குறைந்து 30 பேர் உயிரிழப்பு!!

ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் : பாப்பரசர் லியோ கோரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை…

44 0 0
உலக செய்திகள்

கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி : ட்ரம்ப் எச்சரிக்கை!

அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க…

51 0 0