உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொங்கோவில் உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் : பாப்பரசர் லியோ கோரிக்கை

உலக செய்திகள் 36 நிமிடங்கள் முன்
38 பார்வைகள்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பரசர் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, இத்துரி மற்றும் வட கிவு மாகாணங்களில் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவின் வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளதுடன், பாதிப்புக்குள்ளானவர்களில் சுமார் 48 சதவீதம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் மத்தியில் ஆரம்பமான இந்த 17 ஆவது எபோலா பரவலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.

தற்பொழுது பரவி வரும் ‘புண்டிக்புகியோ’ எனும் அரிதான எபோலா வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும், கடந்த காலத்தில் பயன்பாட்டிலிருந்த 16,250 தடுப்பூசி டோஸ்கள் முதற்கட்டமாக கொங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிலவும் தீவிர நிலையைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகளவிலான உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என வத்திக்கானில் உரையாற்றிய பாப்பரசர் லியோ வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி : ட்ரம்ப் எச்சரிக்கை!

அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க…

45 0 0
உலக செய்திகள்

மருத்துவ பரிசோதனையின் பின் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் “மருத்துவ ரீதியாக நலமாக உள்ளார்”…

50 0 0
உலக செய்திகள்

தம்முடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு…

61 0 0
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி தீவிரம் : மக்களை தாயர்ப்படுத்தும் ஈரான்!!

ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை…

76 0 0