உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
132 பார்வைகள்

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 25.08.2026 இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணவெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0